நமது பாரதிதாசன் பல்கலைக்கழகம் 1982-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப்பட்டது.
1986-ஆம் ஆண்டு Bharathidasan University Non-Teaching Staff Welfare Association தொடங்கப்பட்டது. அன்று தலைவராக திரு. ஆர். தியாகராஜன், செயலாளராக திரு. ஐ. மணிவண்ணன், பொருளாளராக திரு. த. ரபீந்திரன் ஆகியோர் சங்க நடவடிக்கைகளை சிறப்புறத் துவக்கி வைத்தனர்.
1991-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பணியாளர் நலச்சங்கம் என்ற பெயரில் 91/97 என்ற பதிவெண்னுடன் பதிவு செய்யப்பட்டு நமது சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது 36 ஆண்டுகளைக் கடந்து 37-ஆவது ஆண்டில் நமது சங்கம் உள்ளது. மேலும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அங்கிகாரம் பெற்ற ஒரே சங்கம் என்ற பெருமைக்குரியது நமது சங்கம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகப் பணியாளர் நலச் சங்கத்திற்கென்று ஒரு தனி இணையதளம் மற்றும் மின்னஞ்சல் என்கிற நெடுநாளைய கனவு தற்போது நிறைவேறியுள்ளது. சங்க உறுப்பினர்கள் தத்தமது இடத்திலிருந்தே தங்களது கருத்துகளை, கோரிக்கைகளை இனி மின்னஞ்சல் வழியாக வழங்கலாம். மேலும் பணியாளர்களுக்குப் பயன்தரும் படிவங்கள், அரசாணைகள், சுற்றறிக்கைகள், சங்கச் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் படங்கள் ஆகியவை இவ் வலைத்தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கலாகிறது.